இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday 16 October 2012

வைத்திய முப்பூ குரு - விளக்கம் -Muppu guru -muppoo guru

 வைத்திய முப்பூ குரு விளக்கம் 

-Muppu guru -muppoo guru








           வைத்திய முப்பூ குரு 


இன்றைய மருத்துவ முறைகளில் தலைசிறந்த மருத்துவமும்,ஆதி மருத்துவமாகவும் போற்றப்படுவது சித்த மருத்துவம் தான் .இறைவன் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இம்முறையில் மருத்துவம் தவிர யோகம்,ஞானம்,இரசவாதம்,காயகற்பம்,சரகலை,பஞ்சபட்சி, மாந்த்ரீகம், போன்ற அரிய கலைகள் அடங்கியுள்ளன.

இது வேறு எந்த ஒரு மருத்துவ முறையிலும் இல்லாத சிறப்பாகும்.

இப்படி மகத்துவம் வாய்ந்த சித்த மருத்துவத்தின் மருந்துகள் செய்முறையில் மணிமகுடமாக இருப்பது முப்பூ என்னும் குருமருந்து ஆகும்.இம் முப்பூவை தயாரிப்பது மற்ற மருந்துகளைப் போல்  எளிதான காரியமல்ல.சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் முப்பூவைப் பற்றிய பாடல்களில் ஏராளமான பரிபாஷைகளில் (மறை பொருள்)கூறியுள்ளதால் சித்தர்களின் நூல்களை படித்து அறிந்து முப்பூவை தயாரித்தல் என்பது இயலாத காரியமாகும். 

சித்தர் நெறியில் தேர்ச்சி பெற்ற மெய்குருவின் திருவடியைப் பற்றி உண்மை சீடனாக -12-வருடம்  தொண்டுகள் செய்து பெற வேண்டிய அபூர்வமான கலைகளில் இதுவும் ஒன்று என சித்தர்கள் தங்கள் நூல்களில் தெளிவாகக் கூறியுள்ளனர்.

முப்பூவில் 5 - வகை

1 - வைத்திய முப்பூ 
2 - இரசவாத முப்பூ 
3 - மாந்திரீக  முப்பூ 
4 - காயகற்ப முப்பூ 
5 - ஞான முப்பூ   

என்ற ஐந்து வகைகள் உள்ளன.

வைத்திய முப்பூ பற்றிய விளக்கம்:

சித்த  மருத்துவத்தில் சூரணம்,லேகியம்,தைலம்,பற்பம்,செந்தூரம்,சுண்ணம்,பாஷாண கட்டு, களங்கு,போன்ற வகைகளாக மருந்துகள் தயார் செய்யப்படுகிறது.இம் மருந்துகளை நோய்களுக்கு உள்ளே சாப்பிடும் பொழுது இதனை இலகுவாகச் செரிக்கச் செய்து மருந்துகளின் முழுமையான சத்துக்களை உடலில் சேர்ப்பதற்கும், மருந்துகளின் அணுக் கூறுகளைப் பிரித்து    
செயல்படும் தன்மையை பலமடங்கு அதிகரித்து வீரியப்படுத்துவதற்கும் சித்தர்களின் மெய்ஞானத்தால் கண்டறிந்து அருளப்பட்டதே வைத்திய முப்பூவாகும் .

இதனை அனைத்து சித்த மருந்துகளுக்கும் குறிப்பிட்ட அளவில் கலந்து கொடுக்கும் போது சித்தர்களின் நூல்களில் கூறியுள்ளபடி பரிபூரண மருத்துவ பலனை அடைய முடியும்.

முப்பை முன்னே செய் 
மருந்தை பின்னே செய் 
                                          என்பது சித்தர் வழக்காகும்

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதைப்போல் 
முப்பில்லா மருந்தும்..................

சிறப்புடையதல்ல என உணர்ந்து கொள்ள வேண்டும்.உண்மை என்னவென்றால் நாம் நோய்களுக்கு கொடுக்கும் சித்த மருந்துகளின் சத்துக்கள் பாதி அளவு உடலில் சேர்வதே அபூர்வம் தான்.காரணம் நமது உடலில் இரைப்பையில் சுரக்கும் பித்த நீருக்கு (ஹைட்ரோ குளோரிக் ஆசிட்)இம் மருந்துகளை கரைப்பதர்க்கான ஆற்றல் குறைவு என்பதால் பித்தநீரின் ஆற்றலைப் பெருக்குவதற்கு வைத்திய முப்பூ பேருதவி புரிகின்றது.மற்றும் இம்முப்பூவின் ஆற்றலால் மருந்துகள் பல மடங்கு வீர்யத்துடன் செயல் புரிந்து நோய்களை எளிதில் போக்குகின்றது . 

வைத்திய முப்பூவில் இரண்டு வகை உள்ளன.

1 - சூரண முப்பூ                 :அனைத்து வித சூரணங்களுக்கு மட்டும் 

2 -வைத்திய முப்பூ  குரு : லேகியம்,தைலம்,பற்பம்,செந்தூரம்,போன்ற அனைத்திற்கும்.


சூரண முப்பூ விளக்கம் : 
ஆதி வஸ்து வாகிய மூலப் பிரணவப் பொருளிலிருந்து சுத்தி முறையில் நஞ்சுவை நீக்கி பின்பு அகரம் உகரம் என இரண்டாகப் பிரித்து மகரம் எனும் தசதீட்சை யாக முடிக்கப் பட்ட முப்பூ .

இது அனைத்து வித சூரணங்களுக்கும் கலந்து கொடுக்க இரண்டு மடங்கு உயிர்ப்பைத் தூண்டும் ஆற்றல் பெற்றது.


சூரண முப்பூ பயன்படுத்தும் பயன்படுத்தும் முறை : 
மூலிகைப் பொடிகள்,மூலிகை சூரணங்கள்,திரிகடுகு,திரிபலா,தாளிசாதி சூரணம்,அஷ்ட சூரணம்,அமுக்கரா சூரணம்,போன்ற அனைத்து வித சூரணங்களுக்கும் பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் அதாவது சூரணங்கள் 100-கிராமுக்கு -முப்பூ - 10-கிராம் கலந்து கொடுக்க சூரணங்கள் இரண்டு மடங்கு வீர்யத்துடன் செயல்படும் . 

(இது சித்தர் வழி பாரம்பரிய முறையில் கையாண்டு வரும் இரகசிய முறையாகும்)

இம் முப்பூவை முடித்து சுமார் 10- வருடங்களுக்கு முன்  பல  சித்த  மருத்துவர்களுக்கு வழங்கி வந்தோம். அவர்களும் பயன் படுத்தி உண்மையான பலனைக் கண்டு பாராட்டியுள்ளனர்.


நன்றி ! 
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org       

  

  

                                                                                                            

12 comments:

Unknown said...

இந்த எழுத்து புரில்ல அய்யா.எல்லாமே இங்கிலிஷ்ல இருக்கு அத தமிழா சொலுங்க

Unknown said...

அ ண்நேரிஞ்சன் பூண்டு என்றால் என்ன ?
சிறுபுள்ளடி என்றால் என்ன?
தலைச்சுருளி என்றால் என்ன?
செந்தொட்டி என்றால் என்ன?
கொல்லைப்பல்லி என்றால் என்ன?
விடதாரி என்றால் என்ன?
குடிகுச்சகுனி என்றால் என்ன?
வடபொதிகை என்றால் என்ன?
திகை பூண்டு என்றால் என்ன?
பெருவாகை என்றால் என்ன?
காசா மூலி என்றால் என்ன?
இவை அகஸ்தியர் கூறிய மூலிகை இதன் படம் மற்றும் தற்போதைய பெயர் யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள்.அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்

Moorthi said...

இந்த எழுத்து புரில்ல அய்யா.எல்லாமே இங்கிலிஷ்ல இருக்கு அத தமிழா சொலுங்க

Unknown said...

தங்கள் முகவரி , பெயர் , தொலைபேசி எண் அறிய விரும்புகிறேன் , ( தொடர்புகொள்ள ) என் பெயர் ந . சிவக்குமார் தொலை பேசி எண் 98422 96348 smockingstitch@airtelmail.in முடிந்தால் தொடர்புகொள்ளவும் அல்லது தங்கள் தொலைபேசி எண் எனக்கு தெரியப்படுத்தவும் நன்றி .

இமயகிரி சித்தர் said...

எம்மைப் பற்றிய விபரம் மற்றும் தொலைபேசி எண்
அறிய எமது இணைய தளத்தைப் பார்வையிடுங்கள்
இணைய தள முகவரி : www.siddharprapanjam.org

நன்றி...

Unknown said...

ஏறளிஞ்சில் என்றல் என்ன?

இமயகிரி சித்தர் said...

Jiva Rasu
//ஏறளிஞ்சில் என்றல் என்ன?//



நமது "சித்தர் பிரபஞ்சம்" தளத்தில் கேள்வி கேட்க விரும்புபவர்கள்
முதலில் உறுப்பினராக இணைந்து கொண்டு பின்பு கேள்விகள்
கேட்க வேண்டுகிறோம் ...


ஏறழிஞ்சில் மரத்தின் பழம்



ஏறழிஞ்சி விதை இதுதான் இதிலிருந்து குழித்தைலம்
எடுத்து "வசிய மை" "இராஜ வசிய மை" போன்றவைகளில்
சேர்த்து அரைத்தால் மை உயிர் பெறும் .

Unknown said...

இமையகிரி சித்தர்ருக்கு.....வணக்கம் .....
அய்யா ஒரு சிறிய சந்தேகம்?பாதரசம் இயற்கையாக கிடைக்கறது...அது நம் தமிழ் நாட்டில் இருகிறதா என்று தெரிய வில்லை.ஆனால் நம் மூத்த அறிவியல் தந்தைகள்(சித்தர்கள்) எப்படி பாதரசம் கிடைத்து இருக்கும்?அதனை செயற்கையாக தயார் செய்து பயன்படுத்தி இருந்தார்களா?அனைவரும் ஒரே முறையாக செய்தார்களா?பாதரசத்தை தோஷம் விஷம் இருக்கிறது என்று தெரியும்.அதனை பூநீர் கொண்டு தான் சுத்தம் செய்தார்கள் லா இல்லை வேறு எதாவது முறை இருகிறதா?நான் கேள்விப்பட்டது பாதரசம் எதாவது ஒரு முறை கட்டினால் அவன் சிவன் அருள் பெற்றவன் என்று?
இதனை பற்றி எதாவது சித்தர்கள் கூறி இருக்காங்களா?எதாவது எளிய முறை இருகிறதா நீங்கள் அதனை கூறி எங்கள் சந்தேகம் தெளிவு படுத்துங்கள்.
மக்களை நல் வழி படுத்துங்கள்
நன்றி......................
சித்தர்களை தேடும் ஜீவா

சித்தர் பிரபஞ்சம் said...

Jiva Rasu
//இமையகிரி சித்தர்ருக்கு.....வணக்கம் ...

அய்யா ஒரு சிறிய சந்தேகம்?
பாதரசம் இயற்கையாக கிடைக்கறது...அது நம் தமிழ் நாட்டில்
இருகிறதா என்று தெரிய வில்லை.ஆனால் நம் மூத்த அறிவியல்
தந்தைகள்(சித்தர்கள்) எப்படி பாதரசம் கிடைத்து இருக்கும்?அதனை
செயற்கையாக தயார் செய்து பயன்படுத்தி இருந்தார்களா?
அனைவரும் ஒரே முறையாக செய்தார்களா?//

இது சிறிய சந்தேகம் அல்ல ஐயா !

பாதரசம் ஒன்றைத்தான் முதற்பொருளாக வைத்து சித்தர்கள்
இரசவாதம்,இறைஞானம்,காய கற்பம்,அஷ்டமா சித்துக்களை மிக
எளிதில் கைவரப்பெற்றுள்ளார்கள்.

இது பற்றிய விரிவான விளக்கத்தை ஒரு பதிவாக
இடுகின்றேன்...

நன்றி...!
இமயகிரி சித்தர்...

Julious raj said...

Nan senthati parthullen.
Athu engal oorin arugil ullathu.,
Athai neraga namathu udalil ullangai, ullangal thavira engu pattalu miga bayangaramana vali(allathu) arippu edukkum.
Nan oru murai anubavapattullen.,
Enna seithalum kurainthathu 2 nimidangalukku athe vali irukum.
Mudinthal Koodiya viraivil padam pidithu anupugiren.

Bala said...

i want muppu where i get it. Pls give contact no

R.Mani said...

Agara Jothi Sidda Ayurveda Maiyam: Can I have the address please.
regards
R.Mani B.E
Chennai
9790976899
rm5868@gmail.com

பதிவுகளின் வகைகள்